கோப்புப் படம் 
தமிழ்நாடு

கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ. 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ. 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கடலூர் மாவட்டத்திலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள், அதனை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய புயல் சின்னம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது இலங்கை - திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு - தென்கிழக்கே 800 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் இன்று (நவ. 26) அதிக கனமழைக்கான சிவப்பு நிற (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை (நவ. 27) சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

லாட்டரி விற்றவா் கைது

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT