அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி  
தமிழ்நாடு

டிச.15ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) நடைபெறவுள்ளது.

DIN

சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 15.12.2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில், அடுத்தகட்ட கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் தரமாக இருக்கும்: கவின்

என்றும் என் கைகளில்..! ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி மந்தனாவின் ‘ஸ்பெஷல்’ டாட்டூ!

சாலேட் ஹோட்டல் ஒருங்கிணைந்த லாபம் ரூ.154.81 கோடி!

2026ல் திமுக - தவெக இடையே மட்டும்தான் போட்டி: விஜய்

பிக் பாஸ் 9 பிராங்க்: முகத்திரை கிழிந்த போட்டியாளர்கள் - உள்ளத்தால் உயர்ந்த வினோத்!

SCROLL FOR NEXT