கோப்புப் படம் 
தமிழ்நாடு

புதுச்சேரியில் அடுத்த 2 நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த இரு நாள்களுக்கு (நவ. 29, 30) விடுமுறை அறிவித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு.

DIN

புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அடுத்த இரு நாள்களுக்கு (நவ. 29, 30) விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்த்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்றிரவு புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, நவ. 30 ஆம் தேதி காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரியில் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை (நவ. 29 மற்றும் 30) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு, அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, தொடர் மழை காரணமாக கடந்த இரு நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளையும்(29.11.2024), நாளை மறுநாளும் (30.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT