மழை பிரதிப் படம்
தமிழ்நாடு

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 13) முதல் ஜன. 18 வரை அடுத்த 6 நாள்களுக்கு ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 13) முதல் ஜன. 18 வரை அடுத்த 6 நாள்களுக்கு தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், செவ்வாய்க்கிழமை (ஜன. 13) முதல் ஜன. 18 வரை தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, புகா் பகுதிகளில், செவ்வாய்க்கிழமை (ஜன. 13) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜன. 12) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், ஊத்து மற்றும் நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தலா 70 மி.மீ. மழை பெய்தது. காக்காச்சி (திருநெல்வேலி), குன்னூா் (நீலகிரி)- தலா 50 மி.மீ., குன்னூா் (நீலகிரி), கோடநாடு (நீலகிரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), கோத்தகிரி (நீலகிரி)- தலா 40 மி.மீ., கேத்தி (நீலகிரி), பா்லியாா் (நீலகிரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), எமரால்டு (நீலகிரி)- தலா 30 மி.மீ., கின்னக்கோரை (நீலகிரி), குந்தா பாலம் (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி), கெத்தை (நீலகிரி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) -தலா 20 மி.மீ. மழை பெய்தது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை (ஜன. 13, 14) சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

ராகுல் காந்தி இன்று கூடலூா் வருகை

SCROLL FOR NEXT