தமிழ்நாடு

புதுவை, விழுப்புரத்தில் விடியவிடிய பலத்த மழை பெய்யும்! 500 மி.மீ. பதிவாக வாய்ப்பு!!

ஃபென்ஜால் புயல் கரையைக் கடப்பது பற்றி..

DIN

ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்து வரும் நிலையில், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் விடியவிடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடல் அருகே நிலவி வந்த ஃபென்ஜால் புயல், புதுச்சேரி அருகே சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கே புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

ஆனால், 7 மணிநேரமாக புயலின் மையப் பகுதி கரையைக் கடந்து வரும் நிலையில் புதுவை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில் பிரதீப் ஜான் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“புயல் கரையைக் கடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் விழுப்புரம் மற்றும் புதுவையில் பலத்த மழை பெய்யும். கரையை முழுவதுமாக கடக்காமல் இன்னும் கடலை ஒட்டியுள்ளது.

இந்த அபாயமான புயல் காலை வரை கரையைக் கடக்கக் கூடும். இதனால், புதுவை மற்றும் விழுப்புரம் பகுதிகளில் 400 மி.மீ. மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 500 மி.மீ. வரைகூட தொடலாம்.

வரலாற்று மழையாக பதிவாக உள்ளது. கரையைக் கடக்காமல் புயல் நிற்கும் போது, அதிகளவிலான மழை பெய்யும். கடலூரிலும் நாளை மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஃபென்ஜால் புயல் உருவானதில் இருந்தே கடலில் பலமுறை நகராமல் ஒரே இடத்தில் நின்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்க முடியாத அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT