சென்னை மெரினா. 
தமிழ்நாடு

சென்னைக்கான கனமழை எச்சரிக்கை நீங்கியது

சென்னைக்கான அதி கனமழை எச்சரிக்கை விலக்கப்பட்டு மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னைக்கான அதி கனமழை எச்சரிக்கை விலக்கப்பட்டு மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் இரவு 10 மணி வரை மிதமான மழையே பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூரில் மற்றும் புதுச்சேரியில் அதி கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி மட்டுமல்ல மின்ட் மேம்பாலத்திலும் கார் பார்க்கிங்

முன்னதாக வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் காரணமாக இன்று (நவ.30) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னைக்கு அறிவிக்கப்பட்ட அதிகனமழை எச்சரிக்கை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனிடையே மாலை 5.30 மணிக்கே புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தரையைத் தொட்டத்தில் இருந்து 3 முதல் 4 மணி நேரத்தில் புயல் முழுமையாக கரையைக் கடக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிலும் வெற்றி சிம்ம ராசிக்கு: தினப்பலன்கள்!

குழாய் பராமரிப்பு பணி: இன்றும் நாளையும் நீா் விநியோகத்தில் தடங்கலுக்கு வாய்ப்பு!

11.2.1976: இரண்டாவது டெஸ்ட் "டிரா” ஆகியது: கவாஸ்கர் - விசுவநாத் அபார ஆட்டம்

ஸ்ரீராம் பொதுக் காப்பீடு லாபம் ரூ.165 கோடி!

ஆசிய ரைஃபிள்/பிஸ்டல் சாம்பியன்ஷிப்: ஆகிருதி, அஞ்சுமுக்கு பதக்கம்!

SCROLL FOR NEXT