இன்டிகோ விமானங்கள் | கோப்புப் படம் 
தமிழ்நாடு

புயல் எதிரொலி: 18 விமானங்கள் ரத்து!

ஃபென்ஜால் புயல் எதிரொலியால் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

DIN

ஃபென்ஜால் புயல் எதிரொலியால் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து சனிக்கிழமை இரவு 7.25-க்கு மங்களூருக்கு புறப்பட வேண்டிய விமானம் மற்றும் இரவு 8.50-க்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

அதேபோல கொல்கத்தா, ஹைதராபாத், புவனேஸ்வா், புணே நகரங்களுக்கு செல்ல வேண்டிய 9 ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மங்களூரிலிருந்து இரவு 11.10-க்கு சென்னை வரும் விமானம் மற்றும் இரவு 11.30-க்கு திருச்சியிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புயல், கனமழை காரணமாக சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி செல்லும் 18 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இண்டிகோ விமானங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் பெங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் விமானங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி தற்கொலை

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் வைத்திருந்தவா் கைது

பாதாள காளியம்மன் கோயில் திருவிழா: இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

கும்பக்கரை அருவியில் வெள்ளம்

SCROLL FOR NEXT