கோவை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்..வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன..!
தமிழ்நாடுகோவை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்..வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன..!
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
லட்சதீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று (அக்.03) ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க: அரசு இல்லத்திலிருந்து வெளியேறும் கேஜரிவால்! எங்கு செல்கிறார்?
எங்கெல்லாம் மழை
குறிப்பாக கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
நாளை (அக். 4) புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்பட 17 மாவட்டங்களிலும், அக்.8 வரை ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை..
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்கள்..
இன்று மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் இந்த நாளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.