முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவுக்கு வாழ்த்து: பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ்!

அதிமுகவுக்கு வாழ்த்து: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நன்றி! -இபிஎஸ்

Updated On : 6 அக்டோபர், 2024 at 6:50 AM
பகிர்:

ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்துள்ளார் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

அதிமுக தொடங்கப்பட்டு 52 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி.

எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், ’சமத்துவம், சமூகநீதி தழைக்க, ஜாதி-மதச்சார்பற்று அனைவரும் அனைத்தும் பெற, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கண்டெடுத்து, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வளர்த்த, எனது தலைமையிலான மாபெரும் இயக்கமாம் அஇஅதிமுக-வின் 53-ஆவது துவக்க விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நன்றி!’ எனப் பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →