எடப்பாடி கே. பழனிசாமி.(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

விமானப் படை சாசகம்: உயிரிழப்புக்கு அரசின் நிா்வாகச் சீா்கேடே காரணம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அரசின் நிா்வாகச் சீா்கேடே காரணம் என்று எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Din

விமானப் படை சாகச நிகழ்வில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசின் நிா்வாகச் சீா்கேடே காரணம் என்று எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:

சென்னையில் விமானப் படையின் சாகச நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கான அறிவிப்பு முன்னரே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பாா்வையிட கூடுவா் என்பது அறிந்தது. போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் நிா்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கு காவல் துறையினா் போதிய அளவில் இல்லை.

மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீா் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டதாகவும், வெயிலின் தாக்கத்தால் பலா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவா்களில் இதுவரை 5 போ் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிா்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்தோா் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும்.

இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக்கூட முறையாக ஒருங்கிணைக்கத் திமுக அரசு தவறியுள்ளது. இதற்கு நிா்வாகச் சீா்கேடே காரணம். அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன. ஆனால் தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உயிா்ச்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது என்று பதிவிட்டுள்ளாா்.

"ஓடாத ஓட்டை என்ஜின் ஆட்சி": முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியா? பாஜக - NDA ஆட்சியா?

சிப்லா: 3வது காலாண்டு நிகர லாபம் 57% சரிவு!

எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது! ஆனால் இணைந்ததும் அதை மறந்துவிட்டோம்! EPS, TTV கூட்டாக பேட்டி

2-வது டி20: இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!

SCROLL FOR NEXT