முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம்: சாலையோரம் கிடந்த பிறந்த பெண் குழந்தை மீட்பு

மீட்கப்பட்ட சிசு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதி

Updated On : 6 அக்டோபர், 2024 at 5:52 AM
சாலையோரம் கிடந்த பெண் சிசு மீட்பு
பகிர்:

சிதம்பரம் அருகே சாலையோரம் கிடந்த பெண் சிசுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் சரகம் தெற்கு பிச்சாவரம், செஞ்சி காலனி பால்ராஜ் என்பவரின் வீட்டின் அருகே சாலையோரம் கிடந்த, பிறந்து சில மணி நேரங்களே ஆன உயிருடன் இருந்த பெண் சிசு, அங்கு இருந்தவர்களால் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பெண் சிசுவை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →