கோப்புப் படம் 
தமிழ்நாடு

குரூப் 4 தேர்வு: கூடுதலாக 2,208 பணியிடங்கள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

DIN

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 6, 244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதையும் படிக்க | சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தத் தடையில்லை: உயர்நீதிமன்றம்

7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.

குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழித்துணை.. நடிகை சிரி ஹன்மந்த்

இன்று 16, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!

சிக்கனம்... க்ரிதி சனோன்

கண் கனா... ரணாவத்!

கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி: அண்ணாமலை

SCROLL FOR NEXT