முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் உங்கள் ஊரில் மழை பெய்யலாம்!

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Updated On : 12 அக்டோபர், 2024 at 6:25 AM
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
பகிர்:

சென்னை: நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகள் மாநிலங்களுக்கு ஏற்ப வேறு வேறு பெயர்களில் இன்று கோலோகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கோயில்களில் பூஜைகள், வீடுகளில் பூஜை, வழிபாடு என மக்கள் ஆனந்தமாக கொண்டாடும் பண்டிகை நாளில், சில ஊர்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால், வெளியே செல்லும் மக்கள் அதற்கேற்ப தங்களது பயணங்களை மாற்றிக்கொள்ளலாம். அல்லது எச்சரிக்கையாக குடை எடுத்துச் செல்லலாம்.

அதாவது, வானிலை ஆய்வு மையம் சொல்வது என்னவென்றால், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் கரூர், திருச்சி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதில் குறிப்பிட்டு ஒரு சில இடங்களில் மழை பெய்யும். எனவே, இந்த மாவட்ட மக்கள் வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

முழு கட்டுரையைப் படிக்க →