சரக்கு ரயில் மீது மோதி தடன் புரண்ட பாக்மதி ரயில் 
தமிழ்நாடு

கவரைப்பேட்டை ரயில் விபத்து: பாக்மதி ரயில் என்ஜின் மீட்பு!

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே விபத்தில் சிக்கிய பாக்மதி ரயிலின் எஞ்சின் மீட்பு.

DIN

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே விபத்தில் சிக்கிய பாக்மதி ரயிலின் எஞ்சின் இன்று (அக். 13) மீட்கப்பட்டது.

பாக்மதி விரைவு ரயிலின் 130 டன் எடை கொண்ட எஞ்சின் மீட்கப்பட்டு தண்டவாளத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் பொருத்தப்பட்ட ரயிலின் எஞ்சின் டீசல் எஞ்சின் உதவியுடன் இழுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சரக்கு ரயில் மீது மோதி விபத்து

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் செப். 11 ஆம் தேதி இரவு சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது.

பாக்மதி விரைவு ரயில், பிரதான பாதையில் இருந்து விலகி லூப் லைனில் உள்ள தண்டவாளத்தில் நுழைந்தது. இதனையறிந்த ரயில் ஓட்டுநர் ரயிலின் வேகத்தைக் குறைத்தார். அப்போது தண்டவாளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.

இதில் 13 பெட்டிகள் அடுத்தடுத்து தடம் புரண்டு தண்டவாளத்தைவிட்டு கீழே இறங்கின. இதில் 6 பெட்டிகள் கவிழ்ந்தன. முன் பகுதியில் சரக்கு ஏற்றிச்செல்லும் பெட்டிகள் தீக்கிரையாகின.

விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். விபத்தில் 20 பேர் காயம் அடைந்ததாகத் தெரிகிறது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் நேரவில்லை.

விபத்து நடந்த இடத்தில் சீரமைப்புப் பணிகள் முடக்கிவிடப்பட்டு, தற்போது ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... உயிரின் விலை என்ன?

விபத்துக்கு காரணம் என்ன?

பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளானது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொன்னேரியில் இதற்கு முன்பு இருமுறை ரயிலைக் கவிழ்க்க சதி நடந்துள்ளது. அவை முறியடிக்கப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்ற விபத்துக்கும் சதித்திட்டம் காரணமா? அல்லது மனிதத் தவறா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், விபத்துக்கான காரணம் குறித்து அறிய பணியில் இருந்த ஓட்டுநர், பாதுகாவலர், பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | மீண்டும் தண்டவாளத்தில் சிலிண்டர்... தொடரும் ரயில் கவிழ்ப்பு சதிகள்!

விபத்து நடந்த இடத்தில் ரயில் பெட்டிகள் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. எனினும் என்ஜின் பகுதியை மீட்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், டீசல் என்ஜின் உதவியுடன் பாக்மதி விரைவு ரயிலின் என்ஜின் மீட்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT