பள்ளியில் சோதனையிடும் அதிகாரிகள்.  
தமிழ்நாடு

ராணிப்பேட்டை அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ராணிப்பேட்டை அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ராணிப்பேட்டை அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியில் பெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் 2, 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். காலாண்டு மற்றும் ஆயுத பூஜை விடுமுறை முடித்து மாணவர்கள் திங்கள்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர்.

பதவிக்காலம் முடிந்தும் ஆளுநராக ஆர்.என். ரவி தொடருவது ஏன்?

இந்நிலையில் பள்ளியின் நிர்வாக மெயிலுக்கு காலை 10 மணிக்கு மர்ம நபர் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் பள்ளியில் 11 மணி அளவில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்திருந்தனர். இந்த தகவலை பார்த்த தலைமை ஆசிரியர், வகுப்பறையில் இருந்த மாணவர்களை உடனடியாக பள்ளியின் மைதானத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

பிறகு அந்தந்த பேருந்து மூலம் மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல்அறிந்த சிப்காட் காவல் துறையினர் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான இ -மெயில் குறித்து விசாரணை நடத்தி வருதோடு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தேடும் பணியிலும் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT