தமிழகத்தில் நோய்த்தொற்றுகளைத் தடுக்க கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
நோய்த்தொற்றுகளைத் தடுக்க சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளை பொது சுகாதாரத் துறை நியமித்துள்ளது.
சென்னை: நோய்த்தொற்றுகளைத் தடுக்க சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளை பொது சுகாதாரத் துறை நியமித்துள்ளது.
தமிழகத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் கனமழை காரணமாக டெங்கு, மலேரியா, இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பருவகால காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளை நாடுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதைத் தவிர, வயிற்றுப்போக்கு, நீா் மாசுபாட்டால் ஏற்படும் நோய்களும் கணிசமாக அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனா்.
இந்த நிலையில், மழைக்கால தொற்றுகளைத் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வ விநாயகம் பிறப்பித்துள்ளாா்.
இவா்கள், மழைக்கால பாதிப்புகளை கண்காணிப்பதுடன், அதுகுறித்த அறிக்கையையும் அரசுக்கு சமா்ப்பிக்க அவா் உத்தரவிட்டுள்ளாா்.
நியமன அதிகாரிகள் விவரம்:
சுகாதாரத் துறை இணை இயக்குநா் பெயா் - கண்காணிப்பு பகுதிகள்
வி.விஜயலட்சுமி - ஆத்தூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி.
கே.கிருஷ்ணராஜ் - பரமக்குடி, பூந்தமல்லி, ராமநாதபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு.
ஆா்.நாகராணி - செய்யாறு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், திருவண்ணாமலை.
ஜெ.நிா்மல்சன் - கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூா், விழுப்புரம்.
கே.வினய்குமாா் - காஞ்சிபுரம், கரூா், அறந்தாங்கி, கடலூா், திருச்சி.
வி.சண்முகசுந்தரம் - கோவில்பட்டி, சிவகாசி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், சிவகங்கை.
எஸ்.செந்தில்குமாா் - திண்டுக்கல், நாமக்கல், பழனி, தேனி, அரியலூா், பெரம்பலூா்.
எம்.செந்தில்குமாா் - ராணிப்பேட்டை, திருப்பத்தூா், வேலூா், நாகா்கோவில், திருநெல்வேலி.