முகப்பு
தமிழ்நாடு

கனமழை: ரயில் சேவை குறித்த தகவலுக்கு உதவி எண்கள்!

கனமழை எதிரொலியாக தெற்கு ரயில்வே சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு.

Updated On : 15 அக்டோபர், 2024 at 11:33 AM
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.
பகிர்:
Updated On : 15 அக்டோபர், 2024 at 11:21 AM

சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள தெற்கு ரயில்வே உதவி எண்களை அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை - நெல்லூர் கடற்கரை நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னை, செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Updated On : 15 அக்டோபர், 2024 at 11:28 AM

இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களில் சேவையில் இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும், ரயில் சேவை குறித்த தகவல்களை பயணிகள் அறிந்து கொள்ள உதவி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

044 - 25330952, 044 - 25330953 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொண்டு ரயில் சேவை குறித்த தகவல்களை கேட்டறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.