முகப்பு
கோப்புப் படம்
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Updated On : 16 அக்டோபர், 2024 at 2:10 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோன்று சென்னை, காரைக்கால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுவான நிலையில் காற்றழுத்த மண்டலம்

சென்னைக்கு அருகே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்னும் வலுவாக நிலை கொண்டுள்ளது.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மாலை 5.30 மணியளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் - தெற்கு ஆந்திர பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கு இடையே சென்னை அருகே வியாழக்கிழமை (அக். 16) அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று அதி கனமழையும்,

கள்ளக்குறிச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →