எடப்பாடி பழனிசாமியுடன் நடிகை கெளதமி. கோப்புப்படம்
தமிழ்நாடு

அதிமுகவில் நடிகை கெளதமிக்கு முக்கிய பொறுப்பு!

நடிகை கெளதமிக்கு அதிமுகவில் முக்கிய பதவி வழங்கப்பட்டது பற்றி...

DIN

அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை கெளதமியை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

பாஜக பிரமுகர் அழகப்பன் என்பவர் தனது சொத்துகளை ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு எழுப்பிய கெளதமி, கடந்த பிப்ரவரி மாதம் பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அதிமுகவில் இணைந்தார்.

மேலும், பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தடா து. பெரியசாமிக்கு, எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பதவி வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளராக ஃபாத்திமா அலி, விவசாயப் பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி ஆகியோரை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் Stalin பேச்சு

பிக் பாஸ் வீட்டுக்கு சீல்! போட்டியாளர்கள் வெளியேற்றம்! ஏன்?

சிறையில் இஸ்ரேல் ராணுவத்தினர் துன்புறுத்தினர்: கிரெட்டா தன்பெர்க்

மேகாலய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சௌமன் சென் பதவியேற்பு!

ஸுபீன் கர்க் மரணத்தில் திடீர் திருப்பம்! உறவினரான போலீஸ் டிஎஸ்பி கைது!

SCROLL FOR NEXT