காட்பாடி அருகே விவேக் விரைவு ரயிலில் கோளாறு Din
தமிழ்நாடு

காட்பாடி அருகே விவேக் விரைவு ரயிலில் கோளாறு! ரயில் சேவை பாதிப்பு

விவேக் ரயில் என்ஜினுடன் பெட்டிகளை இணைக்கும் லாக்கர் உடைந்தது பற்றி...

DIN

காட்பாடி அருகே சென்று கொண்டிருந்த விவேக் விரைவு ரயிலில் ஏற்பட்ட கோளாறால் ஒரு மணிநேரத்துக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்றுகொண்டிருந்த விவேக் விரைவு ரயில்(22504), காட்பாடி அருகே இன்று காலை 9 மணியளவில் சென்று கொண்டிருந்தது.

அப்போது என்ஜினுடன் பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் என்ற லாக்கர் உடைந்ததால், பெட்டிகள் தனியாக கழன்று என்ஜின் மட்டும் சிறிது தூரம் ஓடி நின்றது.

தண்டவாளத்தில் உடைந்து விழுந்த கப்ளிங்.

அசம்பாவிதம் தவிர்ப்பு

முகுந்த ராயபுரம் - திருவலம் இடையே பாலாற்றின் குறுக்கே இருக்கும் ரயில் பாலத்தை 20 கி.மீ. வேகத்தில் மட்டுமே ரயில்கள் கடக்க வேண்டும் என்பதால், ரயிலின் மெதுவாக இயக்கப்பட்ட சமயத்தில் லாக்கர் உடைந்துள்ளது. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் புதிய லாக்கரை கொண்டு வந்து பொறுத்திய பிறகு, ஒன்றரை மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

இதனால், அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT