மத்திய ரிசர்வ் வங்கி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

சென்னை ரிசர்வ் வங்கியில் காவலரின் துப்பாக்கி சுட்டதால் பரபரப்பு!

சென்னை ரிசர்வ் வங்கியில் பெண் காவலரின் துப்பாக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் பெண் காவலரின் துப்பாக்கி தானாக சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை திடீரென ஆபத்து அலாரம் ஒலித்துள்ளது.

உடனே பணியில் இருந்த ஆயுதப்படை பெண் காவலர் பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியில் தோட்டாக்களை போட்டுள்ளார். தொடர்ந்து வங்கி வளாகம் முழுவதும் சென்று பார்த்ததில் பிரச்னை ஏதும் இல்லை எனத் தெரிந்தது.

பின்னர் அவர் துப்பாக்கியில் இருந்து தோட்டாக்களை எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி தானாகவே சுட்டதில் ஒரு தோட்டா எதிரே சுவரின் மீது துளைத்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இருப்பினும் அலாரம் அடித்தது, துப்பாக்கி வெடித்தது குறித்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT