கோப்புப்படம் 
தமிழ்நாடு

தேவர் குருபூஜையில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

பசும்பொன்னில் ரூ. 1.55 கோடியில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்க தேவர் அரங்கம் திறக்கப்பட்டது.

DIN

முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார்.

இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் ரூ. 1.55 கோடியில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்க தேவர் அரங்கை காணொலி காட்சி மூலம் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-ஆவது ஜெயந்தி விழா, 62-ஆவது குருபூஜை விழா வருகிற 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகின்ற 30-ஆம் தேதி பசும்பொன் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, பிற கட்சிகளின் தலைவர்கள் இந்த பூஜையில் கலந்து கொள்ளவுள்ளதால் ராமநாதபுரன் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT