தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் 
தமிழ்நாடு

தீபாவளி: தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்

தீபாவளியை முன்னிட்டு, தூத்துக்குடி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

DIN

சென்னை: தீபாவளியை முன்னிட்டு, தூத்துக்குடி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடியில் இருந்து அக்.29 , நவ.4-இல் இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06188) மறுநாள் காலை 10.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்தில் இருந்து அக்.30, நவ.5- ஆகிய தேதிகளில் பகல் 12.20 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இதில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 9 பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில், தூத்துக்குடி மேலூா், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.

சாந்தராகாச்சி: சென்னை சென்ட்ரலில் இருந்து செவ்வாய்க்கிழமை (அக்.29) காலை 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06147) மறுநாள் பகல் 1.30 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் சாந்தராகாச்சி சென்றடையும். மறுமாா்க்கமாக சாந்தராகாச்சியில் இருந்து புதன்கிழமை மாலை 5.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06148) மறுநாள் இரவு 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT