தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தவெகவின் மாநாட்டில், நடிகரும் அக்கட்சியின் தலைவருமான விஜய், பாஜக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேலும், திராவிடமும், தமிழ் தேசியமும் தனது இரண்டு கண்கள் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தேனியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது:
“எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக ரசிகர்களை சந்தித்துதான் பயணத்தை தொடங்கினர்.
ஆனால், அதே திரைத்துறையில் இருந்து வந்த நான், மக்களை சந்தித்து அரசியலுக்கு வந்தேன்.
ஒரு நடிகரை பார்க்க அவரது ரசிகர்கள் அதிகளவு கூடுவார்கள், ஆனால், அவர்கள் எல்லாம் வாக்களிப்பார்களா என்பது சந்தேகம்தான்.
விஜய்யின் வருகையால் எனது வாக்கு சதவிகிதம் குறையாது, ஏன் விஜய் ரசிகர்கள்கூட சிலர் எனக்கு வாக்களிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.