சுனிதாவாக மாறிய செளந்தர்யா படம் | எக்ஸ்
தமிழ்நாடு

பிக் பாஸ் 8: சுனிதாவாக நடித்து அசத்திய செளந்தர்யா!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 21வது நாளான இன்று (அக். 29) ஆள்மாறாட்டம் என்ற போட்டியை பிக் பாஸ் நடத்தியது.

DIN

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 21வது நாளான இன்று (அக். 29) ஆள்மாறாட்டம் என்ற போட்டியை பிக் பாஸ் நடத்தியது.

இதில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஏதேனுமொரு போட்டியாளரைப் போன்று நடித்துக் காட்ட வேண்டும்.

தாங்கள் சுட்டிக்காட்ட விரும்பும் செயலை இதன்மூலம் அவர்கள் நடித்துக் காண்பித்து சுட்டிக்காட்டலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் இந்த ஆள்மாறாட்டம் போட்டி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இம்முறை ஆள்மாறாட்டம் போட்டி நடைபெற்றது.

இதில் சுனிதாவைப் போன்று உடை, உடல் பாவனைகளை மாற்றிக்கொண்டு செளந்தர்யா நடித்து காண்பித்தார்.

இதேபோன்று அன்ஷிதாவாக ஜாக்குலினும், செளர்ந்தர்யாவாக ஆர்.ஜே. ஆனந்தியும், ஜாக்குலினாக அன்ஷிதாவும் நடித்தனர்.

இவர்களின் நடிப்பு பிக் பாஸ் வீட்டிலிருந்த சக போட்டியாளர்களையும் வெகுவாகக் கவரந்தது. குறிப்பாக சுனிதாவைப் போன்று பாஸ் லேடியாகவும், மேக்கப் போட்டுக்கொண்டும், அழுதுகொண்டும் செளந்தர்யா நடித்தது பலரைக் கவர்ந்தது.

உடன் நடித்த ஜாக்குலினும் மலையாள பாணியில் தமிழ் பேசி அன்ஷிதாவாக நடித்து செளந்தர்யாவுக்கு ஈடு கொடுத்தார்.

ஆண்கள் அணியில் அருணைப் போன்று சத்யாவும், ரஞ்சித்தைப் போன்று முத்துக்குமரனும் நடித்ததை விட, செளந்தர்யா நடித்தது நகைப்பாகவும், தத்ரூபமாகவும் இருந்ததாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதேபோன்று ஜெஃப்ரியாக ரஞ்சித்தும், தீபக்காக ஜெஃப்ரியும், சத்யாவாக அருணும், முத்துக்குமரனாக வி.ஜே. விஷாலும் நடித்தனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: இந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரி? போட்டியாளர்கள் யார்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT