கோப்புப்படம் 
தமிழ்நாடு

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு: ரயில்கள் தாமதம்!

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறால் ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றி...

DIN

அரக்கோணம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள் சேவையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையத்தில் சென்னை மார்க்கமாக செல்லக் கூடிய தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புதன்கிழமை காலை சிக்னலில் பிரச்னை ஏற்பட்டது.

இதன்காரணமாக, அரக்கோணம் வழியே சென்னை செல்லக் கூடிய ரயில்கள் ஒரு மணிநேரத்துக்கு மேலாக நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சென்னைக்கு நாள்தோறும் பணிக்கு செல்லும் பயணிகள் அரக்கோணம் ரயில் நிலைய மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை வழியாக சொந்த ஊர்களுக்கு செல்ல பயணத் திட்டமிட்டுள்ள பயணிகளும் சிரமம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, சிக்னல் கோளாறை ரயில்வே ஊழியர்கள் சரிசெய்த பின் தாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவார் மனைவிக்கு துணை முதல்வர் பதவி?

துடரும் கூட்டணி! புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மோகன் லால்!

முதல் டி20: ஆடம் ஸாம்பா அபார பந்துவீச்சு; ஆஸி.க்கு 169 ரன்கள் இலக்கு!

ஆன்லைனில் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்!

மத்திய பட்ஜெட்! அதிக முறை தாக்கல் செய்தவரும் மிகச் சிறிய பட்ஜெட்டும்!

SCROLL FOR NEXT