தங்கம் விலை உயர்வு 
தமிழ்நாடு

60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: மக்கள் அதிர்ச்சி!

புதிய உச்சத்தைத் தொட்டுள்ள தங்கம் விலை பற்றி...

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த வார இறுதியில் ரூ. 58,880-க்கு விற்பனை செய்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளான நேற்று மேலும் உயர்ந்தது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்னும் விலை உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, புதன்கிழமையான இன்று காலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 520 அதிகரித்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ. 59,520-க்கும், ஒரு கிராம் ரூ. 7,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 63,560-க்கும், ஒரு கிராம் ரூ. 7,945-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றை நிலவரம்

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ. 59,000-க்கும், ஒரு கிராம் ரூ. 7,375-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 63,040-க்கும், ஒரு கிராம் ரூ. 7,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

இந்த நிலையில், தங்கத்துக்கு போட்டிபோட்டுக் கொண்டு வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து, ரூ. 109-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி விலை ரூ. 1,09,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த அக். 23-ஆம் தேதி வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்தடை

தக்கலை அருகே ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

500 மீனவ பெண்களுக்கு இலவச மீன் விற்பனை பாத்திரம் அளிப்பு

வார இறுதி: 1,040 சிறப்பு பேருந்துகள்

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

SCROLL FOR NEXT