மதுரை ரயில் நிலையத்தில் சக்கரம் கழன்றதால் விரைவு ரயில் தடம்புரண்டு விபக்குள்ளானது.
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து போடிநாயக்கனூருக்கு விரைவு ரயில் (20601) ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னையிலிருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் புறப்பட்டு மறுநாள்களில் போடிநாயக்கனூர் சென்று சேரும்.
அதன்படி புதன்கிழமை (அக்டோபர் 30) இரவு சென்னையில் மின்சார என்ஜினுடன் புறப்பட்ட ரயில் வியாழக்கிழமை (அக்டோபர் 31) காலை 07.10 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது. போடி செல்வதற்காக இந்த ரயிலில் மின்சார என்ஜின் கழற்றப்பட்டு டீசல் என்ஜின் பொருத்தப்பட்டது.
பிறகு காலை 07.36 மணிக்கு மதுரை ரயில் நிலைய ஐந்தாவது நடைமேடையில் இருந்து ரயில் புறப்பட்டது. புறப்பட்ட உடனே என்ஜினுக்கு அடுத்து இருந்த ரயில் மேலாளர் பகுதியுடன் இணைந்த இரண்டாம் வகுப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கானபெட்டியின் ஒரு சக்கரம் தடம் புரண்டது.
இதனால் இந்த ரயிலில் பயணித்தப் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மதுரை ரயில் நிலையத்தில் வழக்கமான ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை.
தடம் புரண்ட ரயில் பெட்டி, ரயிலில் இருந்து கழற்றப்பட்டு, மற்ற ரயில் பெட்டிகளுடன் இந்த ரயில், 118 நிமிடங்கள் காலதாமதமாக காலை 9.28 மணிக்கு போடிநாயக்கனூருக்கு புறப்பட்டுச் சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.