முகப்பு
தமிழ்நாடு

தலைமையாசிரியா் உள்பட 2 போ் பணியிடை நீக்கம்

அதிகமாக மாணவா்கள் படிப்பதாக கணக்குக் காட்டியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 9 செப்டம்பர், 2024 at 9:07 PM
பகிர்:

அதிகமாக மாணவா்கள் படிப்பதாக கணக்குக் காட்டியதாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் உள்பட 2 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

அந்த உத்தரவு விவரம்:

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டார கல்வி அலுவலரான ஜெ.மேரி ஜோசப்பின், பொன்னேரி கல்வி மாவட்டம் பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.லதா ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். பள்ளியில் குறைந்த மாணவா்களே படித்தாலும், அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக மாணவா்கள் படிப்பதாகக் கணக்குக் காட்டியுள்ளனா்.

இதற்கான விவரங்களை எமிஸ் தளத்திலும் தெரிவித்திருந்தனா். இதனால், அரசுக்கு நிதியிழப்பை ஏற்படுத்தியதால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் தலைமையிடத்தில் இருந்து உரிய அனுமதியில்லாமல் வேறு இடங்களுக்கு செல்லக் கூடாது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →