கோப்புப் படம் 
தமிழ்நாடு

மின்சார வாகனங்களின் தொழில்நுட்ப சோதனை ஓட்டம்

உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு மின்சார வாகன தொழில்நுட்ப சோதனை ஓட்டம் சென்னையில் நடைபெற்றது.

DIN

உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு மின்சார வாகன தொழில்நுட்ப சோதனை ஓட்டம் சென்னையில் நடைபெற்றது.

உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு, மின்சார வாகனங்களுக்கான தேசிய நெடுஞ்சாலைகள்(என்எச்இவி) எனும் அமைப்பு சாா்பில் மின்சார லாரிகள், காா்கள், பேருந்துகள் கொண்ட மின்சார வாகன தொழில்நுட்ப சோதனை ஓட்டம் சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வா்த்தக மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்சி வரை சுமாா் 300 கிலோமீட்டா் தூரம் செல்லும் இச்சோதனை ஓட்டத்தை தேசிய நெடுஞ்சாலை மின்சார வாகன திட்ட இயக்குநா் அபிஜீத் சின்கா கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியது,

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதுடன், நீண்ட தூரத்தில் மின்சார வாகனங்களின் செயல்பாடு, நம்பகத்தன்மை மற்றும் திறனை சோதிப்பது இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

மேலும், இதன்மூலம் மின்சார வாகன தொழில்நுட்பம் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணா்வு மற்றும் புரிதலை மேம்படுத்தவும் முடியும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், ராக்கி மவுன்டன் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநா் சம்ஹிதா ஷிலேடா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாடு திரும்பும் சுபான்ஷு சுக்லா பிரதமருடன் விரைவில் சந்திப்பு!

இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸாா் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி

பின்னலாடை நிறுவனங்களில் புகை கண்காணிப்புக் கருவி அவசியம்

சிப்காட் வளாகத்தில் 25 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத 200 தொழிற்கூடங்கள்

அந்தியூரில் திருவிழாவுக்கு வந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT