சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
சென்னை குரோம்பேட்டையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(எம்ஐடி) செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் எம்ஐடி கல்லூரியில் வெடிகுண்டு இருப்பதாகஅண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் வந்துள்ளது.
உடனடியாக தாம்பரம் காவல்துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படவே, குரோம்பேட்டையில் எம்ஐடி கல்லூரியில் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வெடிகுண்டு மிரட்டல் மாணவர்கள் மத்தியில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.