கோப்புப்படம் Din
தமிழ்நாடு

புதுவை சிறுமியை கொலை செய்தவர் சிறையில் தற்கொலை!

புதுச்சேரி சிறையில் கொலை குற்றவாளி தற்கொலை செய்து கொண்டது பற்றி...

DIN

புதுச்சேரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி விவேகானந்தன், சிறையில் திங்கள்கிழமை காலை தற்கொலை செய்து கொண்டார்.

இவர் ஏற்கனெவே சிறைச்சாலையில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய குற்றவாளி

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 5-ஆம் வகுப்பு பள்ளி மாணவியை கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து கால்வாயில் வீசியுள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக 60 வயது விவேகானந்தன் மற்றும் 19 வயதேயான கருணாஸ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

சிறையில் தற்கொலை

காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன், இன்று(செப்.16) காலை அறையின் ஜன்னலில், துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிறுமியை கொலை செய்த வழக்கில் விரைவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலா போகி: திருவள்ளூா் ஆட்சியா் வேண்டுகோள்

திருவள்ளூா் அறிவியல் பூங்காவில் நாளை பொங்கல் விழா

விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT