முகப்பு
நரேந்திர மோடி
தமிழ்நாடு

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து.

தமிழ்நாடு

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து.

Updated On : 17 செப்டம்பர், 2024 at 7:33 AM
நரேந்திர மோடி
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திரெளபதி முர்மு

திரெளபதி முர்மு தனத் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

நரேந்திர மோடிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் ஆளுமை மற்றும் பணியின் மீதான வலிமையால் அசாதாரணமான தலைமைத்துவத்தைக் கொண்டவர். நாட்டின் செழிப்பையும் மதிப்பையும் உயர்த்தியவர்.

தேச உணர்வில் நீங்கள் மேற்கொள்ளும் புதுமையான முயற்சிகள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வழி வகுக்கிறது. நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளுக்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

நாட்டின் பாரம்பரியம் முதல் அறிவியல் வரை அனைத்தையும் 'புதிய இந்தியா' என்ற பார்வையுடன் இணைத்துள்ளார். தனது வலுவான மன உறுதியுடனும், பொது நலனுக்கான உறுதியுடனும், சாத்தியமற்றதாகத் தோன்றும் பல பணிகளைச் செய்து ஏழைகளின் நலனுக்காக புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பிற்காக உழைத்து, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வந்த தீர்க்கமான தலைவரை நாடு பெற்றுள்ளது.

நாட்டு மக்களின் சுயமரியாதையை அதிகரிப்பதுடன், இந்தியா மீதான உலகளாவிய கண்ணோட்டமும் அவரது தலைமையில் மாறியுள்ளது.

கடலின் ஆழத்தில் இருந்து விண்வெளியின் உயரத்திற்கு நாட்டின் கௌரவத்தை உயர்த்திய நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

மு.க. ஸ்டாலின்

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வரும் ஆண்டுகளில் நீண்ட ஆயுளுடனும், நீடித்த ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →