முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 120 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து 2-ஆவது நாளாக புதன்கிழமை பவுனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 54,800-க்கு விற்பனையானது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 9:36 PM
தங்கம் விலை ஒரு சவரன் ரூ.208 உயர்வு 
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து 2-ஆவது நாளாக புதன்கிழமை பவுனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 54,800-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், கடந்த 16 -ஆம் தேதி பவுன் ரூ. 55,040-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 54,920-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை விலை மீண்டும் குறைந்துள்ளது.

அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ. 6,850-க்கும், பவுனுக்கு ரூ. 120 குறைந்து ரூ.54,800-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ. 96-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1,000 குறைந்து ரூ.96,000-க்கும் விற்பனையானது.

முழு கட்டுரையைப் படிக்க →