dotcom
தமிழ்நாடு

மநீம தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு! ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

DIN

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்று வரும் கூட்டத்தில் 1,414 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 2,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்திற்கு வந்த கமல் ஹாசனுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொதுக்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதில், முதலில் கட்சியின் தலைவராக மீண்டும் கமல் ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீப்ரியா தீர்மானத்தை முன்மொழிய, ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு எதிராக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும், தேர்தலில் போட்டியிடும் வயதை 25ல் இருந்து 21 ஆகக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காபி வித்... நடாஷா பரத்வாஜ்!

பிரதமர் பேசியதை திமுகவினர் மடைமாற்றி வருகிறார்கள்: நயினார் நாகேந்திரன்

அவள் ஒரு தேவதை... ஷிவானி நாராயணன்!

பாலைவனத்தில் குளிர்காயும் நிலா... சாரா!

தோல்வியின் வலி எங்களுக்குத் தெரியும், வெற்றியை எதிர்பார்க்கிறோம்: ஹர்மன்பிரீத் கௌர்

SCROLL FOR NEXT