கொலை செய்யப்பட்ட பாண்டியராஜ். 
தமிழ்நாடு

கோவில்பட்டி அருகே கண்மாயில் கட்டட தொழிலாளி வெட்டி கொலை

கோவில்பட்டி அருகே கண்மாயில் கட்டட தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

கோவில்பட்டி அருகே கண்மாயில் கட்டட தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள செண்பகப்பேரி கிராமம், துர்க்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செண்பகராஜ் என்பவர் மகன் பாண்டியராஜ்(25). இவர் கட்டட தொழில் செய்து வந்தார். திங்கள்கிழமை காலை வழக்கம்போல காலை கடன்களை முடிப்பதற்காக அந்த கிராமத்தில் உள்ள கண்மாய் பகுதிக்கு சென்றுள்ளார்.

குழந்தைகள் ஆபாச படம்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு ரத்து

வெளியே சென்றவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த பாண்டிராஜ் குடும்பத்தினர் அவரைத் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது கண்மாய் பகுதியில் வெட்டு காயங்களுடன் பாண்டியராஜ் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து நாலாட்டின்புதூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து போலீஸார் விரைந்து வந்து பாண்டிராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோத காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காவல்துறைக்கு சல்யூட் என்று கூறிதான் தவெக தலைவர் பேச்சைத் தொடங்கினார்” - முதல்வர் ஸ்டாலின்

தவெக சேலம் மாவட்டச் செயலரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

ஜெய்சால்மர் - ஜோத்பூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் தீ விபத்து! 20 பேர் பலி! | Bus fire

காந்தா டிரைலர் எப்போது?

மறுபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி... சோனியா பன்சால்!

SCROLL FOR NEXT