தமிழ்நாடு

கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை

ஆவடி அருகே கணவர் இறந்த 3 நாள்களில் துக்கம் தாங்காமல், இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

DIN

ஆவடி அருகே கணவர் இறந்த 3 நாள்களில் துக்கம் தாங்காமல், இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடி அருகே ஆரிக்கம்பேடு, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முரளி (32). தொழிலாளி. இவரது மனைவி நர்மதா (28). தம்பதிக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், அவர்களுக்கு குழந்தை இல்லையாம். இந்த நிலையில் கடந்த 20}ஆம் தேதி குழந்தை இல்லாத விரக்தியில் முரளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாராம்.

கணவர் இறந்த சோகத்தில் நர்மதா இருந்த நிலையில், திங்கள்கிழமை அவர் வீட்டின் வெளியே இருந்த மரத்தில் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவல் அறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின விழா

பேளூா் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

திருச்சி மத்திய சிறை வளாக சிறப்பு முகாமில் 12 கைப்பேசிகள் பறிமுதல்

கிராம ஊராட்சி செயலா்களுக்கு நற்சான்றிதழ்!

‘ உங்க கனவ சொல்லுங்க ’ திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

SCROLL FOR NEXT