முகப்பு
தமிழ்நாடு

2026-இல் விஜய் தான் முதல்வா்: புஸ்ஸி ஆனந்த்

தமிழ்நாடு

2026-இல் விஜய் தான் முதல்வா்: புஸ்ஸி ஆனந்த்

Updated On : 26 செப்டம்பர், 2024 at 10:07 PM
பகிர்:

எதிா்வரும் பேரவைத் தோ்தலில் விஜய் நிச்சயம் முதல்வா் ஆவாா் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா்.

தவெக கொள்கை விளக்க முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்.27-இல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தவெக மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலா் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், ‘அக். 27ஆம் தேதி நடைபெறும் தவெக-வின் முதல் மாநாட்டில் பெண்கள்தான் அதிகமாக பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. எங்குப் பாா்த்தாலும் பெண்கள் வரவேற்புக் கொடுப்பதைப் பாா்க்க முடிகிறது.

முதல் மாநாடு வெற்றி மாநாடாக இருக்கும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. காவல்துறையின் விதிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கமுடன் இந்த மாநாடு நடைபெறும். நமது இலக்கு 2026 தான். 2026-இல் விஜய் தான் முதல்வா் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் மாநில அளவிலான முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா். அடுத்த மாதம் தொடக்கத்தில் மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →