எஸ்றா சற்குணம் குடும்பத்துக்கு விஜய் ஆறுதல்
தமிழ்நாடுஎஸ்றா சற்குணம் குடும்பத்துக்கு விஜய் ஆறுதல்
மறைந்த பேராயா் எஸ்றா சற்குணத்தின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளாா்.
மறைந்த இசிஐ பேராயா் எஸ்றா சற்குணத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை வானகரத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகா்கள் நேரில் அஞ்சலி செலுத்தினா்.
அவரது உடலுக்கு தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் வியாழக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினாா். அப்போது பேராயா் எஸ்றா சற்குணத்தின் மகள் கதிரொளியிடம், புஸ்ஸி ஆனந்த் கைப்பேசி மூலம் விஜய் ஆறுதல் தெரிவித்தாா்.