தேங்காய் விலை Center-Center-Coimbatore
தமிழ்நாடு

காஸ்ட்லியாகும் தேங்காய் சட்னி: தென்னை போல உயர்ந்த தேங்காய் விலைக்கு காரணம்?

தென்னை போல உயர்ந்த தேங்காய் விலைக்கு காரணம் என்பது பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

கோவை: ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில், ஒரு கிலோ தேங்காய் ரூ.22 முதல் ரூ.25 வரை விற்பனையன நிலையில், செப்டம்பர் கடைசி வாரத்தில் இது இரண்டு மடங்காகி ரூ.55க்கு ஒரு கிலோ தேங்காய் விற்கப்படுகிறது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒரு தேங்காய் விலை ரூ.48 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்திலேயே அதிக தேங்காய் உற்பத்தி செய்யும் கோவையில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் எந்தவொரு பொருளிலும் ஏற்படும் மாற்றம் மாநிலம் முழுக்க எதிரொலிக்கும்.

அந்த வகையில், கோவையில் ஒரு கிலோ தேங்காய் ரூ.69 ஆக உள்ளது. அதுபோல, கடந்த சில நாள்களாக தேங்காய் வரத்துக் குறைந்திருப்பதே விலை ஏற்றத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது.

ஒருபக்கம் தேங்காய் வரத்துக் குறைந்திருப்பதோடு, மறுபக்கம், பாமாயில், சோயாபீன் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி 13.75 சதவீதத்திலிருந்து 35.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதும், தேங்காய் விலை ஏற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தென்னிந்திய தென்னை உரிமையாளர்கள் சங்க இணைச் செயலர் ரத்தின சபாபதி கூறுகையில், மார்ச் - மே மாதத்தில் கடும் வறட்சி நிலவியதால், தென்னை மரங்கள் பலவீனமடைந்தன. இதனால், காய்கள் குறைவாகவே காய்த்தன. அதன் எதிரொலியாக தற்போது குறைவான காய்களை சந்தைக்கு வருகின்றன. இந்த வேளையில் பல மரங்கள் நோய் தாக்கி அழிந்தும் விட்டன. வழக்கமாக ஒரு மரம், மாதத்துக்கு 16 காய்களைக் கொடுக்கும், ஆனால், இது தற்போது மெல்ல குறைந்து வெறும் எட்டுக் காய்களாகக் குறைந்துவிட்டது என்கிறார்.

விலை விண்ணைமுட்டினாலும், விவசாயிகளுக்கு எந்தப் பலனு கிடைப்பதில்லை. தொடர்ந்து தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதால் நட்டம்தான் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல, வளரும் தேங்காயும் எடை குறைவாகவே உற்பத்தியாகிறது. தற்போது 500 கிராம் எடையில்தான் தேங்காய் உற்பத்தியாகிறது என்றார்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த விவசாயி கே.எஸ். பாலச்சந்திரன் கூறுகையில், இதுபோன்றதொரு விலை உயர்வை பார்த்ததேயில்லை. கடந்த 2021ஆம் ஆண்டு விலை உயர்ந்த போதுகூட ஒரு கிலோ ரூ.40க்கு விற்கப்பட்டது. பிறகு அது ரூ.22 ஆகக் குறைந்துவிட்டது என்றார்.

நுகர்வோர் கூறுகையில், இரண்டு வாரங்களக்கு முன்பு ரூ.36க்கு தேங்காய் வாங்கினோம். இப்போது அரை கிலோ எடையுள்ள தேங்காய் ரூ.30 என்கிறார்கள். விலை உயர்ந்துவிட்டதால், தேங்காய் சட்னி உள்பட தேங்காய் பயன்பாட்டையே தவிர்த்து வருகிறோம் என்கிறார்கள்.

இது தேனி நிலவரம்

கோவையில் அப்படி என்றால், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சுற்றி சுமாா் 6,000 ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் தேங்காய்கள் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும், ஏற்றுமதியாகி வருகின்றன.

இங்குள்ள தென்னை தோப்புகளில், சுமாா் 45 நாள்களிலிருந்து 60 நாள்களுக்கு ஒருமுறை தேங்காய் வெட்டப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

விநாயகா் சதுா்த்துக்கு பிறகு வடமாநிலங்களில் தொடா்ந்து தேங்காய் ஏற்றுமதி அதிகரித்து வருவதன் காரணமாக, தற்போது, மட்டை உரிக்கப்பட்ட தேங்காய் ஒரு டன் ரூ. 45 ஆயிரம் வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

இதேபோல, மட்டை உரிக்கப்படாத தேங்காய் கடந்த மாதம் ஒரு டன் ரூ. 9,000 முதல் 10 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது, ஒரு டன் ரூ.15,000 வரை கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால், இந்த விலை உயா்வால் தற்போது சில்லறை விற்பனையாளா்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT