கோப்புப்படம். 
தமிழ்நாடு

மதுரையில் 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரையில் கேந்திரிய வித்யாலயா உள்பட 8 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.

DIN

மதுரையில் கேந்திரிய வித்யாலயா உள்பட 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர். மேலும் பொன்மேனி, சிந்தாமணி, நாகமலை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று காலை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

உதகை மலை ரயில் சேவை இன்று(செப்.30) ரத்து

இதையடுத்து மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பள்ளிகளில் எந்த ஒரு வெடிகுண்டும் கண்டுபிடிக்கப் படவில்லை. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

இதனிடையே மிரட்டல் இமெயில் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மதுரையில் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் சற்று பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய மின்தடை

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நாளைய மின் தடை

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

SCROLL FOR NEXT