வெற்றிலை கட்டுகள் 
தமிழ்நாடு

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

தமிழகம் பெருமையடையும் விதத்தில் கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: தமிழகத்தின் பெருமைமிகு வேளாண் உற்பத்திப் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் விளைவிக்கப்படும் அல்லது குறிப்பிட்ட தனித்துவத்தோடு உருவாக்கப்படும் சிறப்பு வாய்ந்த, தனித்தன்மைகொண்ட பொருள்களை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசால் இந்த புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் புவிசார் பெற்ற பொருள்களை, எந்த நிலையிலும், வியாபார லாபத்துக்காகவோ, போலியாக வேறு யாரேனுமோ இந்தப் பெயரை பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.

முதல்முறையாக, விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடிச் சேலை, காஞ்சிபுரம் பட்டுச்சேலை, மதுரை மல்லிகை, தஞ்சை கலைத்தட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய், பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு உள்ளிட்ட பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், அண்மையில், மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி களிமண்ட பொம்மைகளுக்கும் புவிசார் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைகளுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் அதிகமான பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு, பெறப்பட்டும் வருகிறது.

ஏற்கனவே, கடந்த ஆண்டு திருவண்ணாமலை ஜடேரி கிராமத்தில் தயாராகும் நாமக்கட்டி, திருநெல்வேலி, வீரவநல்லூர் செடிபுட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 15 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பத்திருந்த நிலையில், தற்போது 2 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது.

இதன் மூலம் புவிசார் குறியீடு பெற்ற விவசாயி பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், தயாரிக்கும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரம் உயரும், இப்பொருள்கள் உலக அளவில் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் உயிரிழப்பு

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பெருவெள்ளம், நிலச்சரிவு: 4 குழந்தைகள் உள்பட 7 போ் பலி!

சென்னையில் 5 மண்டலங்களில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்!

விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட இடங்களில்தான் கரைக்க வேண்டும்: சென்னை ஆட்சியா்

எண்மமயமாகும் நற்சாந்துப்பட்டி ஓலைச்சுவடிகள்!

SCROLL FOR NEXT