தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் கோப்புப் படம்
தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

தவெக தலைவர் விஜய்க்கு அறிவிக்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்தது.

DIN

தவெக தலைவர் விஜய்க்கு அறிவிக்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்தது.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் தலைவா் விஜய் 2026 சட்டப்பேரவை தோ்தலை மையமாகக் கொண்டு தோ்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.

தோ்தலை முன்னிட்டு பல்வேறு பொது இடங்களுக்கு அவா் பயணம் செய்யவுள்ளாா்.

இதனிடையே, விஜய்க்கு பல்வேறு அச்சுறுத்தல் எழுந்த நிலையில், அவரின் பாதுகாப்பு கருதி ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து விஜய்க்கு அறிவிக்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்தது.

இதன்படி, 8 முதல் 11 மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை வீரா்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்கவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

பாஜக தலைவர் போட்டியில் நான் இல்லை! - அண்ணாமலை

நாட்டில் உள்ள அரசியல் தலைவா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்ட முக்கிய நபா்களுக்கு அச்சுறுத்தல் தொடா்பான உளவுத் துறை அறிக்கையின் அடிப்படையில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துவரங்குறிச்சியில் விஏஓ கணவா் மா்மச் சாவு

அடிப்படை வசதிகள் மக்களைச் சென்றடைய வேண்டும்!

தஞ்சாவூா் மாவட்டத்துக்கு 2,600 டன் உர மூட்டைகள்

நாட்டுக்கும், மொழிக்கும் மாணவா்களின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என். சிவா எம்பி

ஜன் தன் கணக்குதாரா்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்: ரிசா்வ் வங்கி ஆளுநா்

SCROLL FOR NEXT