தவெக தலைவர் விஜய் தலைமையில் அந்தக் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று(ஜன. 25) மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான இந்தக் கூட்டத்தில் மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இதில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் க்யூஆர் குறியீட்டுடன்கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு அவர்கள் மட்டும் கூட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில், விஜய் மேடைக்கு வரும்போது, அவருக்கு தொண்டர்கள் விசில் அடித்து வரவேற்பு கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, மொழிப்போர் தியாகிகளுக்கும் கொள்கைத் தலைவர்களுக்கும் தவெக தலைவர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
தவெகவின் செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.