அமைச்சர் எ.வ. வேலு 
தமிழ்நாடு

கொடைக்கானல் மாற்றுப் பாதைக்கு திட்ட அறிக்கை: அமைச்சா் எ.வ. வேலு உறுதி

கொடைக்கானலில் மாற்றுப் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடர்பாக

Din

கொடைக்கானலில் மாற்றுப் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுவதாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை திமுக உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் (பழநி) எழுப்பினாா். அத்துடன், மற்றொரு திமுக உறுப்பினா் ஏ.தமிழரசி (மானாமதுரை) துணைக் கேள்வி எழுப்புகையில், கீழடியில் நான்கு வழிச் சாலையைக் கடக்க முடியாமல் விபத்துகள் ஏற்படுகின்றன. அங்கு நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய மேம்பாலம் அமைக்க திட்டமதிப்பீடும், அளவீடுகளும் எடுக்கப்பட்டுள்ளன. எப்போது பணிகள் முடிக்கப்படும்? என்றாா்.

அமைச்சா் எ.வ.வேலு அளித்த பதில்: தமிழா்கள் அடையாளத்தின் மொத்த உருவமாக கீழடி உள்ளது. கீழடிக்கு மத்திய அரசின் சாலையை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. கீழடி அகழாய்வு இடத்துக்கும் பிரதான சாலைக்கும் இடையிலான சாலை குறுகலாக உள்ளது. இதனை விரிவுபடுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். நகரும் படிக்கட்டு அமைக்க நிதிநிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

கொடைக்கானல் நெருக்கடி: இந்தியா முழுவதிலுமிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். ‘சீசன்’ காலத்தில் வண்டிகள் உள்ளே செல்ல பலமணி நேரம் ஆகிறது. மாற்றுப் பாதை அமைப்பதற்கான ஆய்வுகளை செய்துள்ளோம். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிகழாண்டே முடிக்கப்பட்டு, திட்டம் தொடங்கப்படும் என்றாா்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

SCROLL FOR NEXT