தமிழ்நாடு

கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு..

DIN

கோவைக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு கோவை விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வருடன் அமைச்சர் செந்தில்பாலாஜி உடன் வருகை தந்தார்.

கோவை விமான நிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்பேரில், கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் ஏற்பாட்டில் மேளதாளங்கள் முழங்க வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில், வெள்ளக்கோவில் சாமிநாதன், கழக துணைப்பொதுச் செயலாளர்கள் ராசா எம்பி, அந்தியூர் செல்வராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணைமேயர் வெற்றிச்செல்வன், காவல் ஆணையாளர் சரவணசுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கணபதி ராஜ்குமார் எம்பி, ஈஸ்வரசாமி எம்பி, திருப்பூர் மேயர், எம்எல்ஏ செல்வராஜ், திருப்பூர் மாவட்டச் செயலாளர் பத்மநாபன், முன்னாள் எம்பி நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

SCROLL FOR NEXT