ஸ்ரீகோதண்டராமர் வீதிஉலா  
தமிழ்நாடு

சிதம்பரம் கோதண்டராமர் கோயில் தேரோட்டம்!

சிதம்பரம் கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவம் பற்றி.

DIN

சிதம்பரம் மேல ரதவீதியில் உள்ள கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

சிதம்பரம் மேல வீதியில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த மார்ச் 28-ம் தேதி திருமஞ்சனத்துடன் தொடங்கியது. அதன்படி, மார்ச் 29-ம் தேதி கொடி யேற்றம் நடைபெற்றது.

தினமும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீகோதண்டராமர் வீதிஉலா நடை பெற்றது. இதைத் தொடர்ந்து, கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்றது.

மேல ரதவீதி கோயில் வளாகத்திலிருந்து புறப்பட்ட தேரானது நான்கு வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை இழுத்து வழிபட்டனர்.

தினமும் காலை திருமஞ்சனம் நிகழ்ச்சியும், மாலை சீதா கல்யாணமும் நடைபெற்றது. ஏப். 7-ஆம் தேதி திங்கள்கிழமை காலை புஷ்பயாகமும், மாலை ஸ்ரீஆஞ்சநேயர் உற்சவம், பட்டாபிஷேகம், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஏப்.8-ம் தேதி செவ்வாய்க்கிழமை சதகலச திருமஞ்சனம் நிகழ்ச்சியும், ஏப். 9-ம் தேதி விடாயாத்தி திருமஞ்சனமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமே நடைபெற்ற கோதண்டராமர் கோயில் தேரோட்டம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

SCROLL FOR NEXT