முகப்பு
தமிழ்நாடு

நெல்லையில் இளைஞர் அடித்துக் கொலை: உடலைத் தோண்டி எடுத்த காவல் துறை!

நெல்லையில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக...

Updated On : 8 ஏப்ரல், 2025 at 12:51 PM
விசாரணை மேற்கொள்ளும் காவல் துறை.
பகிர்:

நெல்லையில் 20 வயது இளைஞரை அடித்துக் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாநகர குருநாதன் கோவில் விளக்கு அருகே ஆறுமுகம் என்ற இளைஞரைக் கொலை செய்து, புதைத்திருப்பதாகக் காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர்கள், புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, விசாரணை அடிப்படையில் சிவா, விஷால் என்ற இருவரை கைது செய்தனர்.

காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: மாநில ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.