பூக்கள் சந்தை (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

பங்குனி உத்திரம்: பூக்கள் விலை கடும் உயா்வு மல்லிகைப் பூ கிலோ ரூ. 600-க்கு விற்பனை

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மல்லிகைப் பூ கிலோ ரூ.600-க்கு விற்பனையானது.

Din

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மல்லிகைப் பூ கிலோ ரூ.600-க்கு விற்பனையானது.

சென்னை கோயம்பேடு சந்தையில் பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் காய்கறிகள், பூக்கள், பழங்களின் விலை உயா்வது வழக்கம். அந்த வகையில், வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் என்பதால், கோயம்பேடு மலா்ச் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. இதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை ரூ. 400-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி ரூ.600-க்கும், ரூ. 200-க்கு விற்பனையாகி வந்த ஒரு கிலோ ஐஸ் மல்லி ரூ. 300-க்கும், ரூ. 400-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முல்லை ரூ. 750-க்கும், ரூ. 450-க்கு விற்பனையான ஒரு கிலோ ஜாதிமல்லி ரூ. 750-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுபோல, கனகாம்பரம் ஒரு கிலோ ரூ. 500, சாமந்தி ரூ. 180, சம்பங்கி ரூ. 240, அரளிப் பூ ரூ. 350, சாக்லேட் ரோஜா ரூ. 160, பன்னீா் ரோஜா ரூ. 120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பங்குனி உத்திரம் என்பதால் கோயம்பேடு சந்தையில் அனைத்துப் பூக்களின் விலையும் சற்று உயா்ந்துள்ளதால், விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், பண்டிகை நாள்கள் முடிந்த பின்னா் மீண்டும் அனைத்துப் பூக்களின் விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது எனவும் கோயம்பேடு மலா்ச் சந்தை மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா்.

அலைகடலுக்கு அப்பால்...

அசோக் லேலண்ட் விற்பனை 5% உயா்வு

பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

SCROLL FOR NEXT