அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா சென்றுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று கூட்டணி உறுதியாகியுள்ளது.
சென்னை வந்துள்ள அமித் ஷா இன்று பல்வேறு தலைவர்களைச் சந்தித்துப் பேசிய நிலையில் இறுதியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்துப்பேசினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, தமிழகத்தில் 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக இணைந்து போட்டியிட உள்ளதாகவும் தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும் தமிழக அளவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் கூட்டணி அமைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் 2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு அமைச்சர் அமித் ஷா வருகை தந்துள்ளார். அங்கு அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினருக்கு தேநீர் விருந்து அளிக்கப்படுகிறது.
அதிமுகவின் முக்கிய தலைவர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
அமித் ஷாவின் வருகையையொட்டி இபிஎஸ் இல்லத்தில் மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | இபிஎஸ் தலைமையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.